Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சவுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: வெளிநாட்டுப் பயணிகளுக்கு எச்சரிக்கை

சவுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்:  வெளிநாட்டுப் பயணிகளுக்கு எச்சரிக்கை
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில், ஹவுத்திக்களின் தாக்குதலால் பற்றி எரியும் தீ.

அடுத்த நாளும் விமான நிலையத்தின் முனையப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்

பகிரவும் WhatsApp Facebook

ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிப் படையினர் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டுக்குப் பயணம் செய்வது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது கடந்த 10-ம் தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, விமான நிலையப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாளும் விமான நிலையத்தின் முனையப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்; 11 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுவதால், விமானப் போக்குவரத்துக்கும் பயணிகளின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன. பிரிட்டன் அரசு, ரியாத் உள்ளிட்ட சில நகரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவும், சவுதி அரேபியாவுக்கான பயணத் தேவையை மறுபரிசீலனை செய்யுமாறு தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சவுதி அரேபியாவில் விமான நிலையங்கள், ராணுவத் தளங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், சவுதிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு விமானங்களின் நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்தியா, துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளும் தாக்குதல்களைக் கண்டித்துள்ளன. மத்திய கிழக்கில் மோதல் மேலும் தீவிரமடைந்தால், சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் கடல்வழிப் போக்குவரத்திலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.


முந்தைய செய்தி
9 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம்?
அடுத்த செய்தி
காஸா போர் குறித்த ஆவணப் படம்: விசாரணை கோரும் இஸ்ரேல் பிரதமர்

தொடர்புடைய செய்திகள்